அண்ணாத்த ஷூட்டிங்குக்கு வர சம்மதித்த ரஜினி – ஆனாலும் ஒரு சிக்கல்!

செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:30 IST)
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்துக்குப் பின் தொடங்கலாம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்தது ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது .

ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தால் உடனே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும் ஆனால் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே தான் படப்பிடிப்புக்கு வர முடியும் என்று ரஜினிகாந்த் பிடிவாதக கூறியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இப்போது ரஜினி படப்பிடிப்பில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் டிசம்பர் மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்க சொல்லி உள்ளாராம். ஆனால் படக்குழுவினரோ டிசம்பர் மாதம் முதல் குளிர் அதிகமாகும் என்பதால் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்குமே என யோசனையில் உள்ளனராம்

Source வலைப்பேச்சு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்