கமல் லோகேஷ் படத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடக்கம்! பரபரப்பில் படக்குழு!

வியாழன், 22 அக்டோபர் 2020 (16:44 IST)
கமல் லோகேஷ் கனகராஜ் இணையும் அடுத்த படத்துக்காக கமலை வைத்து போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளதாம்.

ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர் நேசன்ல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் ஷீட்டிங் முடியாததாலும் லோகேஷ் படம் தொடங்குவது தாமதமாகும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் திடீரென அந்த படத்தில் கமலே நடித்து தயாரிக்க உள்ளார்.

அந்த படத்துக்கு எவன் என்று நினைத்தாய் அல்லது குரு எனப் பெயர் வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கமலின் தலைவன் இருக்கிறான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கான அடுத்த கட்ட வேலைகளை லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளாராம். இரண்டு நாட்களுக்கு முன்னர் கமலை வைத்து லோகேஷ் ஒரு போட்டோ ஷுட்டை நடத்தி முடித்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்