மாற்றத்திற்கான பெயர் ரஜினி; பேர் போடாமல் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! – காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

திங்கள், 19 அக்டோபர் 2020 (11:32 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து பெரிய கட்சிகளும், புதிதாக தொடங்கிய சிறிய கட்சிகளும் கூட தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ரஜினி கட்சி தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னராக ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் அல்லது வருகிறார் என அவரது தொண்டர்கள் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தலைமை அறிவிப்பு வெளியிடும் வரை ரஜினி குறித்த போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என போஸ்டர் ஒட்டி ரஜினி ரசிகர் மன்றத்தினர் கேட்டுக்கொண்டனர். தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினி குறித்து காஞ்சிபுரத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பெயர் எதுவும் போடாமல் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் “மாற்றத்திற்கான நபர் ரஜினி” என்றும், ”மகத்துவத்திற்கான நேரம் இது” என்றும் ரஜினி புகைப்படத்துடன் கூடிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்