‘வெரிக்கோஸ் வெயின்’ என்ற நரம்பு முடிச்சிகளை சரிசெய்யும் தாளாசனம்

Webdunia
இவை நின்ற நிலையில் செய்யும் ஆசனம் ஆகும். பிராண சக்தியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் விருத்தி செய்கிறது. உடல் தசைகளோடு நாலமில்லாச் சுரப்பிகளையும் இயக்குகிறது.


 
பெயர் விளக்கம்:
 
தாள் என்பது பாதம் என்று பொருள்படும். பாதத்தால் இந்த ஆசனம் செய்வதால் தாளாசனம் என்று பெயர்.
 
தத்துவம்:
 
தாளை வணங்காத தலை தாமரைத் திருவடி என்றெல்லாம் பாதம் பற்றிப் புராணங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. காலிலிருந்து புறப்படும் 44 நரம்புகள் உடலில் பல்வேறு நாளமில்லாச் 
 
சுரப்பிகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. ஆகையால் இந்தக் தாளாசனம் செய்வதால் எல்லா நளமில்லாச் சுரப்பிகளும் மறைமுகமாக இயக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே பாத 
 
அழுத்தம் (Accu Pressure) முறை வைத்தியம் ஏற்பட்டிருக்கிறது.
 
செயல்முறை:
 
விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று பாதங்களை V அமைப்பில் வைத்து இரு குதிக்கால்களும் ஒட்டியவாறு மெதுவாக இயல்பான சுவாசத்தில் மெதுவாகக் குதிகால்களை தூக்கி, அதே நேரத்தில் கைகளையும் தூக்கிக் கால் விரல்களின் அடிச்சதையில் உடலின் எடையைத் தாங்கச் செய்ய வேண்டும்.  கைகள் இரண்டும் காதோடு ஒட்டியவாறு செகுத்தாக இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டும் உள்நோக்கிப் பார்த்தவாறு செங்குத்தாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும். ஆரம்ப காலப் பயிற்சியில் ஈடுபடும்போது 15 விநாடி வீதம் மூன்று முறை செய்யலாம். காலப்போக்கில் ஒரேதடவையில் 45 விநாடிகள் செய்தால் போதுமானது. பழகப் பழக எளிதாகி விடும்.
 
பயன்கள்:
 
உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நம் உடலின் தசைகள், நரம்புகள் நன்கு இழுக்கப்பட்டு, சுருக்கப்படுவதால் வலிமை அடைகிறது. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பரவி வேகமாக ஓடுகிறது.
 
நோய் நீக்கம்:
 
உடலின் எடையைத் தங்கும் பாதம், கணுக்கால், கொண்டைச் சதைகள் போன்ர உடல் பாகங்கள் உறுதிஉஆவதால் குதிக்கால் வலி, பாத வலி, வீக்கம், மூட்டுவலி, கால் வலைவு போன்ற பாதிப்புகள் 
வராது. ‘வெரிக்கோஸ் வெயின்’ நரம்பு முடிச்சிகள் இருந்தாலும் சரியாகிவிடும்.
 
யாருக்கு இந்த ஆசனம்:
 
ஆண், பெண் இருபாலரும், குழந்தைகளும் செய்யலாம்.