மண்டியிட்டு உட்கார்ந்து இடுப்பை கீழே படிய வைத்து இரு கால்களையும் பிருஷ்ட பாகத்திற்கு வெளியே கொண்டு வரவேண்டும். இந்த நிலையில் உடல் எடையை பிருஷ்டபாகம் தான் தாங்க வேண்டும். இரண்டு கைகளையும் அந்தந்த பக்க முழங்காலின் மேல் வைக்கவும். முதுகுத் தண்டை நேரே நிமிர்த்தி நேராக அமர வேண்டும்.
நோய் நேக்கம்:
அதிக எடையுள்ளவர்கள், தொந்தி உள்ளவர்கள் முழு கோமுகாசனம் செய்ய பழகி சில மாதங்களூக்குப் பின் முழுக் கோமுகாசனத்திற்கு போகலாம். ஜீரணக் கோளாறுகள் நீங்க எளிமையான ஆசனம்.