ஐரோப்பாவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கிழக்காசிய நாடுகளுக்கு எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (08:24 IST)
ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தென்பட தொடங்கியுள்ள நிலையில் கிழக்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் தடுப்பூசி மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிர்க்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை தொற்றான ஒமிக்ரான் வைரஸ் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கிழக்காசிய நாடுகளில் தற்போது கொரொனா பாதிப்பு கிட்டத்தட்ட வெகுவாக குறைந்துள்ள நிலையில் புதிய வைரஸ் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு கிழக்காசிய நாடுகளான, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்