இன்னும் 100 வருடத்தில் அழியப்போகும் உலகம்: எச்சரிக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங்!

Webdunia
வியாழன், 4 மே 2017 (13:30 IST)
அடுத்த 100 வருடத்திற்குள் பூமியானது மனிதன் வாழும் சூழலில் இருக்காது எனவும், மனிதர்கள் வேறொரு கிரகத்தை கண்டறிந்து அங்கு குடி புக வேண்டியிருக்கும் எனவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் பிரபல அரிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.


 
 
ஆவணப்படம் ஒன்றிற்காக உலகத்தையே சுற்றி வந்த ஸ்டீஃபன் ஹாக்கிங் முன்னதாக பூமி இன்னும் 1000 ஆண்டுகளில் மனிதர்களால் அழியும் என கூறினார். ஆனால் தற்போது 100 ஆண்டுகளிலேயே பூமி அழியும் எனவும், வேறு கிரகத்துக்கு மனிதன் குடி புக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
 
ஆபத்தானது எந்த நேரத்திலும் வரலாம் என அவர் எச்சரிக்கிறார். பூமியானது முன்று முக்கியமான விஷயங்களால் அழிய உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவை, புவி வெப்பமயமாதல், அணு ஆயுத போர் மற்றும் ஆஸ்ட்ராய்டு எனப்படும் சிறு கோள்களின் மோதல் ஆகும்.
 
புவி வெப்பமயமாதல் மற்றும் அணு ஆயுத போர் போன்றவற்றை நம்மால் இப்போதே உணர முடிகிறது. புவி வெப்பமானது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. உலகம் முழுவதும் வறட்சி காணப்படுகிறது. வெயிலாக இருந்தாலும் சரி, மழையாக, பனியாக இருந்தாலும் சரி அவை புதிய உச்சத்தையே தற்போது படைத்துக்கொண்டு இருக்கிறது. இது புவி வெப்பமாவதின் அறிகுறியே.
 
ஹாக்கிங் அடுத்ததாக குறிப்பிடுவது அணு ஆயுத போர். சமீபத்தில் சிரியா தாக்குதலில் ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தியது மற்றும் அமெரிக்கா, வட கொரியா இடையே அணு ஆயுத போருக்கான சூழல் உருவாகுவதாலும் அதனால் உலக போர் கூட வரலாம் என உலக நாடுகள் அஞ்சுகின்றன.
 
அமெரிக்கா, வட கொரியா இடையே போர் நிகழ்ந்தால் ஸ்டீஃபன் ஹாக்கிங் கொடுத்த 100 வருடத்தில் உலகம் அழியும் என்ற எச்சரிக்கை நடந்துவிடுமோ என்ற பயம் உருவாகிறது. காரணம் அடுத்த போர் ஒன்று நடந்தால் அதில் அணு ஆயுதங்களின் பங்களிப்பு அதிக அளவு இருக்கும்.
அடுத்த கட்டுரையில்