திரும்ப வருமா டிக் டாக்….? பயனாளர்களின் நிலை என்ன?

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (16:31 IST)
சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த 
டை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.

ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.


தற்போதைய தகவலின் படி, அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்துவது பெரும் சிக்கல் உள்ளது என மைக்ரோசாஃப்ட் துணைநிறுவனர் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் டிக்டாக்கை தினமும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 5 கோடி ஆகும்.

இந்நிலையில்,  டிக் டாக் நிறுவனம் டிம்ஃபின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளது. மேலுல் தங்கள் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்துவருவதாகவும்,  இன்னும் சில ஆயிரம் வேலை வாய்ப்புகலை உருவாக்கவுள்ளதாகவும்  ஆனால் ஆகஸ்ட் 14 ஆம் தேதி டிக் டாக் நிறுவனத்தை  90 நாட்களுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வேறு நிறுவனத்திற்கு விற்கவேண்டும் எனக் கெடுவிதிக்கப்பட்டுள்ளதால் இனிவரும் காலத்தில் 10 வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளதாகவும், சட்டப்படி வழக்குத் தொடுக்க உள்ளதாகவும்  டிக் டாக் நிறுவன தெரிவித்துள்ளது.

ஆனால் வழக்குகளைவிட பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாக டிக் டாக் நிறுவன் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்