உலகம் முழுவதும் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் கலந்து உள்ளது. இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தடை இருந்தாலும் ஒரு பல நாடுகளில் இதற்கு அனுமதி உள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி இல்லை. ஆஸ்திரேலியாவிலும் இந்த திருமணங்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில் அங்கு தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதற்கான தபால் வாக்கெடுப்பு பல கட்டங்களாக நடந்த நிலையில் இதில் 62.5 சதவீத வாக்குகள் பதிவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரத்தை அந்நாட்டு புள்ளியல் துறை அறிவித்துள்ளது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது.
இதில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆதரவாக அதிகமானோர் வாக்களித்திருந்தால், இந்த திருமணத்தை அங்கீகரிக்கும் 25-வது நாடாக ஆஸ்திரேலியா மாறும் என கூறப்படுகிறது.