ஆச்சர்ய விமானம்! - ஓடுதளத்தில் செல்லாமல் பறக்கும் விமானம் [வீடியோ]

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (13:35 IST)
ஓடுதளத்தில் செல்லாமல் உடனடியாக மேலேறிச் செல்லும் புதிய ரக விமானத்தை இங்கிலாந்து விமான நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
 

 
வழக்கமாக தரையிலிருந்து புறப்படும் விமானங்கள் ஓடுதளத்தில் இருந்து சிறிது நேரம் சென்ற பிறகு மேலெழும்பி செல்லும். ஆனால், A350 என பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு விமான பேருந்து உடனடியாக மேலெழும்பி செல்லும் திறன் கொண்டது. இந்த விமான பேருந்தில் ஒரே நேரத்தில் 366 பயணிகள் பயணிக்க முடியும்.
 
இது குறித்து கூறியுள்ள விமான போக்குவரத்து ஆர்வலர் காலின் போர்டியோஸ், “வழக்கமாக செல்லும் விமானத்தைப் போலவே சாதரனமாக, எந்த மாற்றமும் இன்றி சௌகர்யமாக பறந்து செல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

வீடியோவை பாருங்கள்:
 
அடுத்த கட்டுரையில்