வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்று பொருளாதார தடைகைமீறி தொடர்ந்து ஏவுகணை சோத்னையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐநா-வும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சில காலம் சோதனை நடத்தாமல் அமைதியாய் இருந்த வடகொரியா மீண்டு ஏவுகணை சோதனையை துவங்கியுள்ளது. சமீபத்தில் அடுத்து எங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் என்ற பட்டியலை வெளியிட்டது.
தற்போது, இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இது ஜப்பானின் கடல் பகுதியில் விழுந்ததுள்ளது. இத்தகவலை தென் கொரியா தெரிவித்தது. அதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இது 13 ஆயிரம் கிமீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை 1000 கிமீ தூரம் மட்டுமே சென்று தாக்கியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் யங் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இன்றி சோதனையை நடத்தியுள்ளார். மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை அமெரிக்கா முழுவதையும் தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.