ஈராக் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்.. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம்..!

Mahendran
சனி, 3 பிப்ரவரி 2024 (10:45 IST)
ஈராக் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தி உள்ளதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
 
ஜோர்டனில்  ஈரான் ஆதரவு போராளிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதல் இறையாண்மையை மீறும் செயல் என ஈராக் கொந்தளித்த நிலையில் தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி எதிர்கொள்ளும் என ஈராக் எச்சரித்துள்ளது. 
 
கடந்த வார இறுதியில் ஜோர்டனில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தாக்குதலாக அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. 
 
இந்த  நிலையில் அமெரிக்காவுக்கு சரியான பதிலடி கொடுக்க ஈராக் நாடும் தயாராகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்