ஆபாசப்படத்தை ஆய்வு செய்ய புதிய படிப்பு! – அமெரிக்காவில் ஆச்சர்யம்!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (12:51 IST)
அமெரிக்காவில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் ஆபாசப்படங்களை ஆய்வு செய்யும் புதிய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி, ஸ்மார்ட் போன் வளர்ச்சியை தொடர்ந்து உலகம் முழுவதும் ஆபாச படங்கள் ஒரு பெரும் பணம் கொழிக்கும் சந்தையாக மாறியுள்ளது. ஏராளமான ஆபாச இணையதளங்களில் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இவ்வாறான ஆபாச தளங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்திருந்தாலும், இணையத்தில் வேறு பல வசதிகள் மூலமாக பலரும் ஆபாச படங்களை அதிகம் பார்க்கின்றனர். அதிகமான ஆபாச படங்களை தயாரிக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்காகவே அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வளர்ந்து வரும் ஆபாச பட வணிகம் குறித்து ஆய்வு செய்ய புதிய படிப்பை அமெரிக்காவின் வெஸ்ட்மினிஸ்டர் கல்லூரி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த படிப்பில் ஆபாச படங்களை பார்த்து அவற்றில் எந்த மாதிரியான காரணிகள் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்