”நான் ஒரு குழந்தைகளை கொல்லும் பேய்”? – பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொன்ற செவிலியர்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (15:12 IST)
பிரிட்டன் நாட்டில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த செவிலியர் ஒருவர் ஈவு, இரக்கமில்லாமல் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த லூசி லெட்பி என்ற பெண் அங்குள்ள செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை 2 மாதங்களுக்குள்ளாக அம்மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றுள்ளார்.

ALSO READ: டுவிட்டர் ஒப்பந்தம்: எலான் மஸ்க்கிடம் விசாரணை!

கடந்த 2018ல் ஒரு குழந்தையை கொல்ல முயன்றபோது இவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் மேலும் 15 குழந்தைகளை இவர் கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி போடுதல், வெற்று ஊசியில் காற்றை இழுத்து குழந்தைகளுக்கு செலுத்துதல் என பல வகையில் இவர் குழந்தைகளை கொன்றுள்ளார்.

இதுகுறித்து இவர் அளித்த வாக்குமூலத்தில் “நான் ஒரு பேய்.. நான்தான் குழந்தைகளை கொன்றேன். நான் வாழத் தகுதி அற்றவள்” என கூறியுள்ளார். குழந்தைகளை சரிவர பராமரிக்க முடியாததால் அவர்களை கொன்றதாக இவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்