சீனா, ஹாங்காங்கில் இருந்து வரும் சர்வதேச பார்சல்கள் நிறுத்தம்.. அமெரிக்கா அதிரடி

Siva
புதன், 5 பிப்ரவரி 2025 (09:17 IST)
சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வரும் சர்வதேச பார்சல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க தபால் சேவைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பார்சல்கள்  நிறுத்தி வைப்புக்கான எந்த காரணத்தையும் அரசு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுவதால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அவர் 10% கூடுதல் வரி விதித்த நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரி விதித்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து, சீனாவும் அதிரடியாக நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், அமெரிக்க தபால் சேவை அதிகாரி ஒருவர், சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் சர்வதேச பார்சல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு வந்திருப்பதாகவும், இந்த பார்சல்களை டெலிவரி செய்ய வேண்டாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. இருப்பினும், இது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் என்று நம்பப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்