கடந்த ஆண்டு துருக்கியில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ஆனால் அந்நாட்டு அரசு பொதுமக்களின் ஆதரவோடு ஒரே நாளில் ராணுவ புரட்சியை அடக்கிவிட்டது. இதனால் ஏற்பட்ட பயங்கர சண்டைக்கு பின்னர் 3 ஆயிரம் பேர் ராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டன.ர்
இந்த நிலையில் ராணுவ புரட்சிக்கு முக்கிய காரணகர்த்தா என்று சந்தேகிக்கப்படும் அமெரிக்காவில் வாழும் மதகுரு பெதுல்லா குலன்தான் என்பவரை நாடு கடத்த வேண்டும் என்று அமெரிக்காவை துருக்கி வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், துருக்கியில் ராணுவப் புரட்சிக்கு காரணமானவராக கருதப்படும் மதகுரு குலன் ஆதரவாளர்கள் சுமார் 1000 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 81 மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இந்த 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மீண்டும் ராணுவ புரட்சி செய்ய முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.