துருக்கி: கட்டிட இடிபாடுகளில் 128 மணி நேரம் சிக்கியிருந்த குழந்தை மீட்பு

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (21:57 IST)
துருக்கி  நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் 128 மணி நேரம் சக்கியிருந்த குழந்தை  ஒன்று மீட்கப்பட்ட சம்பவம்  நடந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியா  நாடுகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவாக இந்த நில நடுக்கத்தால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ, இந்தியா, உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து மீட்புப் படையும் சென்றுள்ளனர்.

இந்த  நிலையில், துருக்கி நாட்டின் அன்தாக்யா என்ற பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சுமார் 128 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

கடும் குளிர், மற்றும் ஆபத்தான பகுதியில் இருந்து குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதால் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.

அக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்