பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்: டிரம்ப் சர்ச்சை கருத்து

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (12:57 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்து செல்வது மூலம், பள்ளிகளில் துப்பாக்கிச் சுடு சம்பவங்களை தவிர்கலாம் என தெரிவித்துள்ளார்
 
அமெரிக்காவின்  ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலை பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 17 மாணவர்கள் உயிரழந்தனர். இதற்கு காரணமான 19 வயது கொலைகாரனை ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2012க்குப் பின் நடந்த மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. 
 
இது குறித்து டிரம்ப் பங்கேற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பபட்டது, அதற்கு டிரம்ப், எல்லா பள்ளிகளுக்கும் அரசால் பாதுகாப்பு வழங்க முடியாது. அதனால் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் தடுக்க பள்ளியில் இருக்கும் சில ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.  
 
இந்நிலையில் துப்பாக்கி சூட்டினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்