அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நடிகர் கமல்ஹாசனுக்குத் தடை

புதன், 21 பிப்ரவரி 2018 (07:39 IST)
அரசியல் நோக்கம் இருப்பதால் அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல அனுமதி இல்லை என மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று துவக்குகிறார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார்.
 
மேலும், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன்,மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணநிதி, நடிகர் ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்தித்து பேசினார்.
 
இந்நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு இராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நினைத்த கமலுக்கு அனுமதி இல்லை என மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசியல் நோக்கம் இருப்பதால் தான் இந்த மறுப்பு என நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்