உன் சிரிப்பு சூப்பர்...நிருபரிடம் ஜொல்லு விட்ட டிரம்ப் - வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (14:02 IST)
அயர்லாந்து பிரதமருடன் தொலைபேசியில் பேசிகொண்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பேச்சை நிறுத்திவிட்டு ஒரு பெண் நிருபரை அழைத்து, அவரின் புன்னகையை பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
சமீபத்தில் அயர்லாந்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட லியோவரத்கர் என்பவருக்கு டிரம்ப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து பேசிக்கொண்டிருந்தார். இதை பதிவு செய்வதற்காக வெள்ளை மாளைகையில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் அங்கு கூடியிருந்தனர். அதில், அயர்லாந்து நாட்டை சேர்ந்த கெய்த்திரியோனா பெர்ரியும் ஒருவர்.
 
அப்போது தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப், திடீரெனெ  பெர்ரியை அழைத்து, நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் எனக் கேட்டு விட்டு, இவரின் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. இவர் உங்களை நன்றாக கவனித்துக் கொள்வார் என நம்புகிறேன்” என லியோவரத்கரிடம் தெரிவித்தார்.
 
டிரம்ப் இப்படி ஜொல்லு விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
 
அடுத்த கட்டுரையில்