ஒபாமா, டிரம்ப் சந்திப்பு: வெள்ளை மாளிகையில் பரபரப்பு!!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (13:07 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். 


 
 
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகை சென்று அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அவருடன் மனைவி மெலானியா, துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  மிக் பென்ஸ், குடியரசு கட்சியை சேர்ந்த சபாநாயகர் பால்ரியான் ஆகியோரும் சென்று இருந்தனர்.
 
வெள்ளை மாளிகை சென்ற டொனால்டு டிரம்பை அதிபர் பராக் ஓபாமா வரவேற்றார். பின்னர் இவர்கள் இருவரும் ஒவல்  அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
 
டிரம்பின் மனைவி மெலானியா ஒபாமாவின் மனைவி மிச்செலியுடன் சந்தித்து பேசினர்.
 
அவர்களின் சந்திப்பு சுமார் ஒன்றைரை மணி நேரம் நடந்தது. அப்போது அவர்கள் இருவரும் உள்நாடு மற்றும் வெளியுறவு கொள்கைகள் குறித்து பேசினர் என கூறப்படுகிறது.
 
ஒபாமாவை சந்தித்த பின்னர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஓபாமாவை சந்தித்து தனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என பெருமையுடன் கூறினார்.
 
எதிர்காலத்தில் ஒபாமாவுடன் இணைந்து தனது செயல்பாடு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 
அடுத்த கட்டுரையில்