திருநங்கைகளுக்கு அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிய அனுமதி.

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (13:24 IST)
அதிபர் டிரம்ப் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர முட்டுக்கட்டை போட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவால் வரும் ஆண்டு முதல் திருநங்கைகள் சேர்க்கப்படுவார்கள் என அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
 
அமெக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தை அந்நாட்டு மக்கள் ஆதரித்தனர். ஆனால் அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை தேர்வு செய்வது தற்காலிகமாக ஒத்தி வைக்கபட்டது.
திருநங்கைகளால் ராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் காரணமாகவே இந்த முடிவிற்கு தள்ளப்பட்டதாக டிரம்ப் விளக்கமளித்தார். டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வாஷிங்டன் மாகாண நீதிமன்றம் உள்பட மூன்று நீதிமன்றங்கள் டிரம்ப் அறிவிப்புக்கு தடை விதிப்பதாக தீர்பளித்தது.
 
இதையடுத்து வரும் ஜனவரி மாதம் முதல் ராணுவத்தில் திருநங்கைகள் வழக்கம் போல தேர்ந்தடுக்கப்படுவார்கள் என அமெரிக்க பாதிகாப்பு துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்