2017-ல் டிவிட்டரில் அதிகம் ரீடிவிட் செய்யப்பட்ட பதிவு!!

வெள்ளி, 8 டிசம்பர் 2017 (18:12 IST)
2017 ஆம் ஆண்டு அதிகம் சமூகவலைதளமான டிவிட்டரில் அதிகர் ரீடுவிட் செய்யப்பட்ட பதிவு எதுவென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான உணவு பொருட்களில் ஒன்று சிக்கன் நஹ்ஹட்ஸ். இந்த உணவுக்கு அமெரிக்கர்கள் அடிமை. இந்நிலையில் வெண்டிஸ் எனப்படும் நிறுவனத்திடம் கார்ட்டர் வில்க்கர்சன் என்பவர் வித்தியாசமான கோரிக்கை வைத்து இருந்தார்.
 
ஒரு வருடம் முழுக்க இலவசமாக எனக்கு சிக்கன் நஹ்ஹட்ஸ் வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்று டிவிட்டரில் கேட்டு இருந்தார். முதலில் அவரின் கேள்விக்கு வெண்டிஸ் உணவகம் பதில் அளிக்கவில்லை. பின்னர், உங்களுடைய டிவிட் 18 மில்லியன் ரீடிவிட் ஆகிவிட்டால் ஒரு வருடம் முழுக்க உங்களுக்கு இலவசமாக சிக்கன் நஹ்ஹட்ஸ் வழங்கப்படும் என தெரிவித்தது. 
 
மேலும், இதனை ஒரு வருடத்திற்குள் இந்த சாதனையை எட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில் அவரது டிவிட், மொத்தமாக 3.6 மில்லியன் ரீடுவிட் ஆகியுள்ளது. இந்த வருடத்தில் அதிகம் ரீடிவிட் செய்யப்பட்ட டிவிட்டர் பதிவில் அவருடைய டிவிட் தான் முதலில் உள்ளது. இதன் பின்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் நிற பாகுபாடு குறித்த டுவிட் 1.7 மில்லியன் முறை ரீடுவிட் செய்யப்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்