ரத்து செய்யப்படுமா குரூப் 4? உச்சக்கட்ட ஆலோசனையில் டி.என்.பி.எஸ்.சி!

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (10:52 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வானையத்தின் குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றோர் பெரும்பாலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தது சர்ச்சையை எழுப்பியது. தேர்வில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் தேர்வு எழுதியவர்கள் மற்றும் விடைத்தாள் திருத்தியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விசாரணையின் முடிவு இன்னும் சில நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முறைகேடு நடந்திருப்பது நிரூபணமானால் தேர்வு செல்லாததாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. எவ்வாறு முறைகேடு நடந்தது என்பதை ஆராய்ந்து மீண்டும் அப்படி நிகழாதாவாறு புதிய விதிமுறைகளுடன் மீண்டும் தேர்வு வைக்கப்படலாம் என் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் எதிர்காலத்தில் நடக்க போகும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என தேர்வு எழுத காத்திருப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்