பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.... பிரான்ஸில் 'டிக்டாக் 'செயலிக்கு தடை

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (14:00 IST)
இந்தியா, கனடா, பெல்ஜியம், ரஷியா, ஜப்பான்  உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே சீனாவில் டிக்டாக் செயலிக்கு அதிகாரப்பூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்திலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இங்கிலாந்து நாட்டு அமைச்சர் ஆலிவர் டவ்டன் கூறியிருந்தததாவது: 'நாட்டில் அரசு அலுவலங்களில் அரசிற்குச் சொந்தமான கம்யூட்டர், தொலைபேசிகள், உள்ளிட்ட தொழில் நுட்பக் கருவிகளில் டிக்டாக் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கக்கூடாது' என்று உத்தரவிட்டது.

ரஷியா நாட்டிலும், டிக்டாக், ஸ்னாப் சாட், டெலிகிராம், வாட்ஸ் ஆப் போன்ற ஆப்கள் பயங்கரவாத ஆப்களாக பரிந்துரைக்கப்பட்டு, அவை தடை செய்யப்பட்டன.

இந்த நிலையில். பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக  பிரான்ஸ் நாட்டிலும்  'டிக் டாக்' செயலியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பிரான்ஸ் நாட்டின் அனைத்து அரசு அலுவலங்களிலும், அரசிற்குச் சொந்தமான மின்சாதனங்களில் யாரும் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  ஊழியர்கள் தங்கள் சொந்த செல்போன்கள் மற்றும் மின்சாதனங்களில் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தலாம்  என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்