”காரிலிருந்து இறங்கி வாக்கிங் சென்ற புலி”..பரபரப்பு வீடியோ

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (15:51 IST)
ரஷ்யாவில் புலி ஒன்று, காரிலிருந்து இறங்கி சாலையில் நடந்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள இவானோவா நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது வீட்டில் ஒரு புலியை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் புலியை காரில் ஏற்றிகொண்டு சென்றுள்ளார். நடுவழியில் ஒரு சிக்னலில் கார் நின்றது. அப்போது காரில் இருந்த புலி, காரிலிருந்து வெளியே வர முயன்றது. அப்போது இளைஞர் புலியை கட்டுபடுத்த முயற்சி செய்தார். ஆனால் கார் கதவு “லாக்” செய்யாமல் இருந்ததால் புலி சாலையிலிருந்து காரில் குதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் காரில் இருந்து இறங்கி புலியை பிடிக்க முயன்றார். ஆனால் புலி அவரிடம் சிக்காமல் சாலையில் ஆட்டம் காட்டியது. பின்னர், ஒரு வழியாக அந்த இளைஞர் புலியை பிடித்து காரில் அடைத்தார். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்