’போட்டி இருக்கலாம் ஆனால் ஏமாற்றக்கூடாது’’- 'Threads' செயலி பற்றி எலான் மஸ்க் கருத்து

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (17:22 IST)
டிவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக Threads என்ற சமூக வலைதளத்தை மெட்டா நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

அதன்படி, நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்ட ‘திரெட்’ செயலியில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  திரெட்ஸ் குறித்து டிவிட்டர் அதிபர் எலான் மஸ்க்  ‘’போட்டி இருக்கலாம் ஆனால் ஏமாற்றக்கூடாது’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டர் நிறுவனன் வழக்குரைஞர் அலெக்ஸ் ஸ்பிரோ மெட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘’மெட்டாவின் ‘திரெட்’ செயலியை உருவாக்க டிவிட்டரின் முன்னாள் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு டிவிட்டர் வர்த்தகம் மற்றும் பிற ரகசியங்கள் பற்றி தெரியும். எனவே டுவிட்டர் நிறுவனம் அறிவுசார் சொத்துரிமைகளை செயல்படுத்த விரும்புகிறது.

டிவிட்டரின் வர்த்தக மற்றும் பிற தகவல்களைப் பயன்படுத்துவதை மெட்டா நிறுவனம் நிறுத்த வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்