போயிங் விமானத்தை சொகுசு வீடாக மாற்றிய பொறியாளர்!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (23:11 IST)
உலகில் பல வித்தியாசமானவற்றைப் பார்த்திருப்போம், சிலர்  பழைய கப்பல்கள், கண்டெய்னர்களில் வீடுகள்,ஓட்டல்கள் போன்றவற்றை அமைத்திருப்பர்.

அந்த வகையில், அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரில் வசித்து வரும் புரூஸ் கேம்பல் (64).

இவர், அங்குள்ள அரசாங்கத்தில் மின் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

தன் ஓய்விற்குப் பின், தனக்குச் சொந்தமான  நிலத்தில், போயிங் 727 ரக விமானத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்.

இந்த விமானத்தில் தன் தேவைக்கேற்ப சில மாற்றங்கள் செய்து, அவர், வசிக்கும் வீடாக மாற்றியிருக்கிறார்.

இந்த விமான வீட்டில் சுமார் 180 க்கும் மேற்பட்டோர் வசிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
இந்த வித்தியாசமான யோசனையைச் செயல்படுத்த அவர் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவழித்திருப்பதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்