ஒன்றன்பின் ஒன்றாக மோதிய 130 வாகனங்கள்! – அமெரிக்காவில் கோர விபத்து!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (11:06 IST)
அமெரிக்காவின் டெக்ஸாச் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் ஒன்றன் மீது ஒன்றாக 130க்கும் அதிகமான வாகனங்கள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் பிரதான நெடுஞ்சாலையான வொர்த் கோட்டை சாலையில் வழக்கம் போல ஏகமான வாகனங்கள் பயணித்துள்ளன. அதிகமான குளிர் வானிலையாலும், சாலைகள் மிகுந்த ஈரப்பதத்துடனும் இருந்ததாலும் திடீரென வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சரிய வரிசையாக பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்டுள்ளன.

சுமார் 130க்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிலையில் இதனால் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமான அளவு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்