தைவானில் பட்டம் விடும் திருவிழாவில் பட்டத்தோடு 3 வயது சிறுமி பறந்து சென்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவானில் பட்டம் விடும் திருவிழா கன ஜோராக நடந்துள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் விதவிதமான ராட்சத அளவிலான பட்டங்கள் வானில் பறக்கவிடப்படும். அதை காண்பதற்காக மக்கள் பலர் கூடுவது வாடிக்கை.
இந்த முறையும் அதுபோல பல பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. ராட்சத பட்டம் ஒன்றை விடுவதற்காக அங்கிருந்தவர்கள் தயாரான போது பட்டத்தின் வாலை 3 வயது குழந்தை ஒன்று பிடித்திருப்பதை கவனிக்காமல் விட்டு விட்டனர். வானில் பறந்த பட்டத்தோடு குழந்தையும் சேர்ந்து வானுக்கு தூக்கி செல்லப்பட்டது. இதை கண்டு கூட்டத்திலிருந்தவர்கள் அதிர்ந்து கூச்சலிட்டனர். எனினும் குழந்தையை மீட்பதற்கான வழி தெரியவில்லை.
பூமியிலிருந்து பல அடி உயரத்திற்கு பட்டம் தூக்கி சென்ற போதும் குழந்தை பட்டத்தின் வாலை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தால் பட்டம் தாழ்ந்து பறக்க தொடங்கியபோது குழந்தை பூமியை நோக்கி வந்தது, உடனே அங்கிருந்தவர்கள் தாவி பிடித்து குழந்தையை மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Don’t let kid doing kite alone. Btw the girl is safe and alive. Location Nanliao Fishing Harbor, Taiwan pic.twitter.com/cwczuWa5PY