அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: மரண எண்ணிக்கையும் அதிகரிப்பதால் பரபரப்பு

திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (06:47 IST)
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,53,77,704 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 850,149 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகில் கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 17,700,949 பேர் மீண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 369 பேர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 398 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 673 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2வது நாடான பிரேசிலில் 3,862,311 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல் அதிக பாதிப்பை சந்தித்த 3வது நாடான இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை  3,619,169 ஆக உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றால் 120,896 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் 64,617 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை அடுத்து பெரு, தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் சிலி நாடுகள் கொரோனா பாதிப்படைந்த முதல் பத்து நாடுகள் பட்டியலில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்