கொரோனாவிலிருந்து மீண்டு வா இந்தியா! – சிட்னி பல்கலைகழகத்தில் மூவர்ண கொடி!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (14:50 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா மீண்டு வர வேண்டி சிட்னி பல்கலைகழகம் மூவர்ண கொடி நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பலரும் உயிரிழந்து வரும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இந்தியா கொரோனாவிலிருந்து மீள வேண்டி பல நாடுகளில் இந்திய மூவர்ண கொடி நிறத்தில் ஒளி விளக்குகள் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தில் இந்தியா கொரோனாவிலிருந்து மீள வேண்டி மூவர்ண கொடியின் நிறங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்