பிரியாணி கடையில் திடீர் தீ விபத்து..! 43 பேர் உடல் கருகி பலியான சோகம்!

Prasanth Karthick
வெள்ளி, 1 மார்ச் 2024 (09:35 IST)
வங்கதேசத்தில் பிரியாணி கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.



வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள பெய்லி சாலையில் அடுக்குமாடி வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் உணவகங்கள், மின்சாதன பொருள் விற்பனையகங்கள், ஆடை கடைகள் என பல கடைகள் செயல்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளங்களில் ஒன்றில் செயல்பட்டு வந்த பிரியாணி கடை ஒன்றில் திடீரென தீ பற்றியுள்ளது. மளமளவென கொழுந்து விட்ட தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் மக்கள் பலர் தீயில் சிக்கி செய்வதறியாது தவித்தனர்.

உடனடியாக சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு படையினர் நெடுநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் இந்த விபத்தில் தீயில் சிக்கியும், புகையால் மூச்சு திணறியும் 43 பேர் பரிதாப பலியாகினர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்