இன்று முதல் விசா இல்லாமல் இலங்கை செல்லலாம்.. எத்தனை மாதங்கள் தங்கலாம்?

Mahendran
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (12:02 IST)
இன்று முதல், அதாவது அக்டோபர் 1ஆம் தேதி முதல், இலங்கைக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய விசா தேவை இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்பட 35 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த திட்டம் கொண்டு வருவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று முதல், விசா இல்லாமல் இலங்கைக்கு செல்லும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆறு மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனால், இலங்கைக்கு கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்றும், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்போதைக்கு 35 நாடுகளுக்கு இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வருங்காலத்தில் மேலும் சில நாடுகளுக்கும் இந்த திட்டம் விரிவாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்