அமெரிக்காவுடன் தொடர்ந்து பகைமை பாராட்டி வரும் வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா – வட கொரியா இடையே தொடர்ந்து முரண்பாட்டு மோதல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுள்ளதால் இரு நாடுகள் இடையே சுமூகமான உறவுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இரண்டை ஒரே சமயத்தில் சோதித்து பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் தரக்கூடியவை என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவற்றின் சோதனைக்கு தடை விதித்துள்ள நிலையிலும் வட கொரியா இதை சோதித்து பார்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் வட கொரிய செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுகுறித்து நட்பு நாடுகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.