சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழரான தங்கராஜ் சுப்பையா என்ற 46 வயது நபர் இன்று காலை தூக்கில் இடப்பட்டார். அவர் ஒரு கிலோ கஞ்சா கடத்தியதாக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.
இதையடுத்து மரண தண்டனை நிறைவேற்ற ஐநா மனித உரிமை அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இன்று காலை சிங்கப்பூர் அரசு மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது
தங்கராஜ் சுப்பையா இன்று காலை தூக்கில் இடப்பட்டார் என சிங்கப்பூர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சிங்கப்பூரின் கொள்கை சிங்கப்பூர் மக்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்டது என்று இந்த தூக்கு தண்டனை குறித்து சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.