சட்டை பாக்கெட்டில் வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்; வைராகும் வீடியோ

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (12:22 IST)
இந்தோனேசியாவில் வாடிக்கையாளர் ஒருவரின் சட்டை பையில் இருந்த ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய வீடியோ காட்சி வைரலாக பரவியுள்ளது.


 

 
இந்தோனேசியாவில் தனியார் விடுதி ஒன்றில் பணியாற்றி வரும் யுலியான்டோ என்பவரின் ஸ்மார்ட்போன் தனது சட்டை பையில் வைத்திருந்தபோது வெடித்து சிதறியது. இந்த சம்பவம் கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்துள்ளது. அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி கேமரா வீடியோ சமூக வலைத்தளம் மற்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
வெடித்த ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடல் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது. இதனால் சாம்சங் நிறுவனம் அந்த மாடல் மொபைல்களை திரும்ப பெற்றுக்கொண்டது. இந்நிலையில் தற்போது கேலக்ஸி கிராண்ட் டுயோஸ் மாடல் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியுள்ளது.
 
அதிகப்படியான வைபை, ப்ளூத் மற்றும் ஜிபிஎஸ் பயன்பாடுதான் சாம்சங் ஸ்மார்ட்போன் வெடிக்க காரணம் என கூறப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நன்றி: Viral Video

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்