சேவையை நிறுத்தினா சொத்துகளை கைப்பற்றுவோம்! – பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (08:21 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் சேவையை நிறுத்தியுள்ள நிறுவனங்களை ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.

மேலும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தி வருவதை ரஷ்யா கண்டித்துள்ளது.

இதுகுறித்து புதிய சட்டம் இயற்றியுள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்ய பிரதமர் மைக்கெல் மிஷுஸ்டின் “வெளிநாட்டு நிறுவனங்கள் நியாயமற்ற முறையில் மூடப்பட்டால், அந்நிறுவனத்தின் மீதான அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் அதன் உரிமையாளரின் முடிவை பொறுத்து நிறுவனங்களின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு வேலை செய்ய விரும்பும் மாற்று நிறுவனங்களுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்