தனுஷின் அண்ணனை பாராட்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

வியாழன், 10 மார்ச் 2022 (23:50 IST)
நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனை  பாராட்டியுள்ளார் ஐஸ்வர்யா  ரஜினிகாந்த்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா .இவரும் இவரது  கணவர் நடிகர் தனுஸும்  பரஸ்பரமாக தங்கள் 18 ஆண்டுகால திருமண  வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர். இது சினிமாத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை  ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களை இயக்கய இயக்கு நரும் நடிகர்  தனுஷின் அண்ணனுமான செல்வராகவனை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன்-  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சாணிக்காகிதம். இப்படத்தின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் செல்வராகவன். இதைப் பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரைப் பாராட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்