பிரதமர் மோடி பற்றி பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்திற்கு ரஷியா கருத்து

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (22:38 IST)
பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்ட  ஆவணப் படத்திற்கு ரஷியா கருத்துக் கூறியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்ட “இந்தியா தி மோடி கொஸ்டீன் (India the modi question) என்ற ஆவணப்படம் வெளியான நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு, இப்படத்தைப் பகிரவும் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் வெளியிட்டத்திற்கு பிபிசி நிறுவனத்திற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆவணப் படம் தடையை மீறி சில இடங்களில் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரிஷ்டிஷ் நிறுவனமான பிபிசி ஆவணப் பிரதமர் மோடி குறித்த ஆவணப் படம் வெளியிட்டதற்கு ரஷிய கருத்துக் கூறியுள்ளது.
 

ALSO READ: பிபிசி ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவோம்: டெல்லியில் டி.ஆர்.பாலு எம்.பி பேட்டி
 
இதுகுறித்த கேள்விக்கு ரஷிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர், மரியா சகரோவா, ரஷியா மட்டுமின்றி உலகில் முக்கிய நாடுகளுக்கு எதிராக பிபிசி நிறுவனம் தகவல் போரிடுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன் பிபிசி நிறுவனம் இங்கிலாந்து அரசுடனே பிரச்சனை செய்தது.  எனவே, பிபிசிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்