ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்றிய இளம்பெண்: நெகிழ்ச்சி வீடியோ

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (11:29 IST)
ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை, ஒரு இளம்பெண் மீட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ரஷ்யாவில் 2 வயது குழந்தை ஒன்று எதிர்பாராதவிதமாக ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டது. அதைக்கண்டு பதறி துடித்த அக்குழந்தையின் பெற்றோர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
 
உடனே அங்கு விரைந்த போலீசார், அக்குழந்தையை மீட்க, அந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகிலேயே பள்ளம் தோண்டினர். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
 
எனவே, அங்கிருந்த ஒரு 17 வயது இளம்பெண்ணை, ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி, அந்த குழந்தையை மேலே தூக்கி வருவது என முடிவெடுத்தனர். 
 
அதன்படி அந்த இளம்பெண், கிணற்றுக்குள் இறக்கப்பட்டார். ஆனால், மூச்சுத்திணறல் காரணமாக, சில நிமிடங்களில் அப்பெண் மேலே தூக்கப்பட்டார். அதன்பின், சிறிது நேரத்திற்கு பின் அப்பெண் மீண்டும் கீழே இறக்கப்பட்டார். இந்த முறை அப்பெண், அந்த குழந்தையை மேலே தூக்கி வந்து விட்டார்.
 
அந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக வெளிவந்துள்ளத்து.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....
 
அடுத்த கட்டுரையில்