வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓரின காதல் ஜோடி: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (18:21 IST)
அமெரிக்காவில் இந்திய பெண் ஒருவரும், பாகிஸ்தான் பெண் ஒருவரும் திருமணம் செய்துகொள்வதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில், ஓரின காதல் ஜோடியான இரு பெண்கள், தங்கள் திருமணத்திற்காக ஃபோட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

அந்த புகைப்படங்களில் உள்ள இரு பெண்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இந்தியாவைச் சேர்ந்த பெண்ணின் பெயர் அஞ்சலி சக்ரா. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணின் பெயர் சுந்தாஸ் மாலிக். அஞ்சலி இந்து மதத்தைச் சேர்ந்தவர், சுந்தாஸ் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.

மேலும், இவர்களது புகைப்படத் தொகுப்பை, நியூயார்க் லவ் ஸ்டோரி என்று பெயரிட்டு ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த டிவிட்டர் பதிவு உலகில் உள்ள பலராலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்