போப் ஆலோசகர் மீது பாலியல் புகார்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (17:25 IST)
போப் ஆண்டவர் பிரான்சிஸ் நிதி ஆலோசகர் கார்டினல் ஜார்ஜ் பெல்(75) மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து ஆஸ்திரேலிய காவல்துறையினர் நேரில் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.


 

 
ஜார்ஜ் பெல் மீது 1970ஆம் ஆண்டில் 2 சிறுவர்கள் பாலியல் புகார் அளித்தனர். நீச்சல் குளத்துல் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அச்ச்சிறுவர்களர் புகார் அளித்தனர். 
 
அதைத்தொடர்ந்து 1980ஆம் ஆண்டில் 3 சிறுவர்கள் முன் ஜார்ஜ் பெல் நிர்வாணமாக நின்றாதக புகார் அளிக்கப்பட்டது. அதோடு மெல்போர்ன் நகரில் ஆர்ச் பிஷப்பாக இருந்த போது பாலியல் புகார்களை சரியாக கையாளவில்லை என்ற புகாரும் அவர் மீது இருந்தது.
 
இந்த புகார்கள் குறித்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண காவல்துறையினர் வாடிகன் சென்று, ஜார்ஜ் பெல்லை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
 
இதுகுறித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. மேலும் ஜார்ஜ் பெல் மீண்டும் அவர் மீதான புகார் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்