கனடாவில் அவசரநிலையை எதிர்த்து போராட்டம்! – திண்டாட்டத்தில் அரசு!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (08:36 IST)
கனடாவில் ட்ரக் டிரைவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கி வருகின்றன. அதேசமயம் தடுப்பூசி கட்டாயப்படுத்தப்படுவதற்கு பல நாடுகளில் மக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனடாவில் ட்ரக் ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் ட்ரக் ட்ரைவர்கள் போக்குவரத்து சாலைகளில் ட்ரக்கை வழியை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கனடாவில் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக எமெர்ஜென்சியை அறிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எமெர்ஜென்சி அறிவிப்புக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கனடா தொடர்ந்து பரபரப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்