வெற்றிகரமாக விண்வெளி சென்று வந்த தொழிலதிபர்! – மேலும் 600 பேர் முன்பதிவு செய்துள்ளனர்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:43 IST)
பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் ப்ரான்சன் வெற்றிகரமாக இன்று விண்வெளி சென்று திரும்பி சாதனை படைத்துள்ளார்.

விண்வெளி பயணம் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் சோதனை முயற்சியாக 5 பேர் கொண்ட விண்வெளி குழுவை இன்று விண்வெளிக்கு அனுப்பியது. இதில் இந்நிறுவனத்தின் தலைவர் ரிச்சர் ப்ரான்சனும் ஒருவர்.

யுனிட்டி 22 என்ற விண்கலம் மூலமாக வெற்றிகரமாக விண்வெளி சென்று அவர்கள் பூமி திரும்பிய நிலையில் மேலும் பலர் விண்வெளி பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இதுவரை சுமார் 600 பணக்காரர்கள் விண்வெளி பயணத்திற்கு முன்பதிவு செய்துள்ளதாகவும், ஆண்டிற்கு 400 விண்வெளி பயணங்களை விர்ஜின் கேல்க்டிக் திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்