துபாயில் அரசுப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்தால் தங்கம், ஐபோன்கள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
துபாயில் வாகனங்கள் அதிகரித்து வருவதால், சுவாசக்காற்று மாசுப்படுவது மட்டுமல்லாமல் வாயுமண்டலத்தையும் பாதிப்படைகிறது. துபாய் நாட்டின் சுற்றுச்சூழல் வாகனங்களின் புகையால் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதால், அதை தடுக்க துபாய் நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
அதன்படி பொதுமக்களை ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு தங்கம் மற்றும் ஐபோன்கள் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் மூலம் துயாய் நாட்டு அரசு வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டுள்ளது.