கண்ணீர் விட்டு கதறிய டெலிவரி பாய்! – திருடியதை கொடுத்து திருந்திய திருடர்கள்!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (14:54 IST)
பாகிஸ்தானில் டெலிவரி பாயிடம் திருடிய திருடர்கள் அவர் கதறி அழுவதை பார்த்து பொருட்களை திரும்ப கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் வீடு ஒன்றில் உணவு  கொடுக்க சென்றிருக்கிறார் டெலிவரி பாய் ஒருவர். உணவு டெலிவரி செய்துவிட்டு தனது வாகனத்தை எடுக்க சென்றபோது பைக்கில் வந்த இருவர் அவரை மறைத்துள்ளனர். பைக்கில் இருந்து இறங்கி கத்தியை காட்டி மிரட்டிய நபர் டெலிவரி பாயிடமிருந்த பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளார்.

அவர்களால் அதிர்ச்சியடைந்த டெலிவரி பாய் அவர்கள் கேட்டபடியே பொருட்களை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் தனது பொருட்களை அவர்கள் மிரட்டி பறித்து செல்வதை தாங்க முடியாமல் கதறி அழ தொடங்கியுள்ளார். டெலிவரி பாய் அழுவதை கண்டு தாங்க மாட்டாமல் அவரது பொருட்களை திரும்ப கொடுத்த திருடர்கள் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்