நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு! – நாடாளுமன்றத்தை கலைக்கும் இம்ரான்கான்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (13:15 IST)
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்க இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. நாடாளுமன்றம் கூடிய நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறி சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை நிராகரித்ததோடு நாடாளுமன்ற கூட்டத்தை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் அதை தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் இம்ரான் கான் “எனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பட்டது சரியே” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆட்சியை கலைத்து தேர்தலை நடத்த குடியரசு தலைவருக்கு இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்