உச்சத்தில் ஒமைக்ரான் பாதிப்பு - ஒரே நாளில் 12,133 பேருக்கு தொற்று

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (15:03 IST)
பிரிட்டனில் ஒரே நாளில் 12,133 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது அந்நாட்டு சுகாதாரத்துறை.

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்நிலையில் பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,133 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிரிட்டனில் ஒட்டுமொத்தமாக ஒமைக்ரான் பாதிப்பு 37,101 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்