ஒமிக்ரான் பரவல்: இஸ்ரேலில் 5வது கொரோனா அலை அச்சம்!

திங்கள், 20 டிசம்பர் 2021 (11:57 IST)
இஸ்ரேலில் 5வது கொரோனா அலை தொடங்க வாய்ப்பு என அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் அச்சம். 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்நிலையில் இந்த ஒமிக்ரான் பரவால இஸ்ரேலில் 5வது கொரோனா அலை தொடங்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இஸ்ரேலில் தற்போது 134 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளது. 307 பேருக்கு அத்தொற்று இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
 
தற்போது ஒமிக்ரான் பாதிப்பு குறைவாக இருந்த போதிலும் அது வரும் வாரங்களில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. எனவே இஸ்ரேலில் 5வது கொரோனா அலை பரவல் ஒமிக்ரானால் ஏற்பட்டுவிடுமோ என அச்சம் எழுந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்